வியாழன், 27 செப்டம்பர், 2012

நட்பு


என் அன்னைக்கும்
அவளுக்கும்
என் தந்தைக்கும்
தங்கைக்கும்
இந்த தரணிக்கும்
தமிழுக்கும்
என் குருவுக்கும்
கருவுக்கும்
என் மகனுக்கும்
மகளுக்கும்
என்ன......................
என் உயிருக்கும்
உடலுக்கும்
என் மனதில் இல்லாத இடம்,
என் “நண்பனுக்கு” உண்டு.........

அழுகிறார்கள்.... அடிக்கிறார்கள்....


அணு உலை கலாச்சாரம்,
அறவே வேண்டாமென்று
கண்ணீர் விட்டு அழுகிறார்கள்....

உலகமே அழிந்தாலும்,
உலை என்றும் அழியாதென்று
கண்ணீர் புகையால் அடிக்கிறார்கள்....

சம்சார வாழ்கையே போதும்,
மின்சார வாழ்கை வேண்டாமென்று
கண்ணீர் விட்டு அழுகிறார்கள்....

மின்சாரமின்றி இனிமேல்,
சம்சாரி வாழ்வது கடினமென்று
கண்ணீர் புகையால் அடிக்கிறார்கள்....

கழுத்தளவு தண்ணீரில் நின்று,
“கரண்டு” ஏதும் வேண்டாமென்று
கண்ணீர் விட்டு அழுகிறார்கள்....


வெளிநாட்டில் பணம் வாங்கிட்டு,
வேலையையா தடுக்கிறீர்களென்று
கண்ணீர் புகையால் அடிக்கிறார்கள்....

உலை ஒருநாள் வெடிக்குமென்று,
ஊர் முழுதும் நம்புவதாக
கண்ணீர் விட்டு அழுகிறார்கள்....
 
உலையில் வேலை செய்பவரெல்லாம்
உயிருடனே இருக்கிறாரென்று
கண்ணீர் புகையால் அடிக்கிறார்கள்....

இயற்கை தந்த வளம் போதும்,
இனிமேலும் உலை எதற்கென்று
கண்ணீர் விட்டு அழுகிறார்கள்....

எத்தனையோ நாளாயிற்று,
இப்போது மட்டும் ஏனென்று
கண்ணீர் புகையால் அடிக்கிறார்கள்....



உடம்பில் உயிர் இல்லாமல்,
ஊருக்கு “கரண்ட்” எதற்கென்று
கண்ணீர் விட்டு அழுகிறார்கள்....

உலக அரங்கில் தலை நிமிர
உலை மிகவும் அவசியமென்று
கண்ணீர் புகையால் அடிக்கிறார்கள்....

அழுபவர்களிடமும்;;;;;;
அடிப்பவர்களிடமும்;;;;;;
ஒரே கேள்வி?????????
உலை வந்ததும்..... உயிர்கள் போகுமா?????
உயிர்கள் போயிதான்..... உலையே வருமா?????