அவனை நான் முத்தமிட்டிருக்கக் கூடாது..
ஆணுக்கு ஆண் முத்தமிடலாமா?
அது முறையாகுமா?
என் உற்ற நண்பன் ஆயிற்றே..
உயிருக்கு உயிரானவன் “ நண்பன்” என்கிறோம்..!
அவனை முத்தமிட்டால் தப்பா?
பொது இடத்தில் வைத்து
இப்படி "பொசுக்கென்று" முத்தினால்??
ஒரு மாதிரி அநாகரீகமாக
இருக்காதா??
அன்பு மிகும் போது,
அணை கட்ட முடியுமா??
அதில்,, ஆணென்ன???
பெண்ணென்ன??
ஆசை மிகுதியில்
கொடுப்பது
தானே முத்தம்...!
ஓரினச் சேர்க்கையாளனென
உலகம் நினைத்தால்??
நினைக்கட்டும்.. புத்திகெட்ட உலகம்..
பொசுங்கட்டும்... எனக்கென்ன?
எனக்குத் தெரியாதா,,,
நான் யாரென்று??
உலகத்தை விடு..!
உன்னவளும் பார்த்தாள் அல்லவா??
ஆமாம்.. அவளும் பார்த்தாள்..
நான் உதட்டோடு உதடாய்
அவனை முத்துவதை...!
என்ன நினைத்திருப்பாளோ.?
இனிப் படுக்கையறையில்
அவளை முத்தமிடும் போது,
என்ன நினைப்பாளோ??
அனுமதிப்பளா? அத்தனைக்கும்..?
சரி.. நீ முத்தமிட்டது
அவனுக்குப் பிடித்ததா??
முத்தமிடும் போது அவன்
முகம் கோணியதைக் கவனித்தாயா?
அது.. அவனுக்கு எதிர் பாராமல்
கிடைத்த அதிர்ச்சியால் இருக்கலாம்..
முத்தத்தில்
கொடுப்பவர்க்கும்
வாங்குபவர்க்கும்
சந்தோசம் இருக்க வேண்டுமல்லவா..!
எனக்கு சந்தோசமாக இருந்ததே..!
அவனுக்கு சந்தோசமாக இருந்திருக்குமா?
சங்கோஜமாக அவன் நெளிவதைப்
போலிருந்ததே..
சே.... சரிதான்...!
கட்டியணைத்து நிறுத்திஇருக்கலாம்.
வேண்டுமென்றால் முதுகில் இரண்டு
பாசத் தட்டுகளோடு முடித்திருக்கலாம்...!
பல நாள் நட்பல்லவா,,
குழந்தைப் பருவம் முதல்
தொடர்ந்ததல்லவா..
அதனால்தான் பாசம்
முத்தமாகப் பொங்கி விட்டது...
அதுவே நடந்தது..!
பின்ன... நானென்ன திட்டமிட்டதா..
அவனை முத்தமிட்டது....
எல்லாம் சரி..
எதற்கு உதட்டில் முத்தினாய்???
கன்னத்தில் கொடுத்திருக்கலாமே??
உச்ச அன்பைக் காட்ட
உதட்டு முத்தமே.. சிறந்ததென்று எண்ணினேன்.
அன்பை வெளிக்காட்டவே
ஆகச் சிறந்த கருவி என்றெண்ணினேன்.
முத்தமிட யத்தனித்து
முகம் நோக்கிச் செல்கையில்,,,
உச்ச அன்பு மிகுதியால்
உதட்டில் "முத்தம்" பாச்சினேன்..
அன்பு மட்டுமே இருந்ததே தவிர
"அவய பேதம்" முத்தத்திற்கில்லை..
செய்வதெல்லாம் செய்து விட்டு
சரி செய்யப் பார்க்கிறாய்..
இல்லை தெரியாமல் தான்
கேட்கிறேன்...!
ஆணுக்கு ஆண் முத்தமிடலாமா?
அது முறையாகுமா?
என் உற்ற நண்பன் ஆயிற்றே..
உயிருக்கு உயிரானவன் “ நண்பன்” என்கிறோம்..!
அவனை முத்தமிட்டால் தப்பா?
.................---- நண்பன் ஒருவனுக்கு பாராட்டும் பொருட்டு “ஒரு முத்தத்தை” கொடுத்து விட்டு,
ஊர் உலகுக்கு பயந்த மனசாட்சி “என்னை” படுத்திய பாடு....
......மேற்கண்ட உரையாடல்கள்...!!!
ஹா ஹா ஹா
பதிலளிநீக்கு