அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, கேட்கும் வழக்கமான கேள்விகள் சில உண்டு.
சாப்பிட்டாச்சா மக்கா...
ஆமாம்மா... அங்க என்னது இன்னைக்கு?
இங்க ஆப்பமும் ரசவடையும் மக்கா... - என்று சொன்ன அந்த நிமிடத்திலிருந்து ரசவடையின் ஞாபகம். ரசவடைக்காக கொலை கூட பண்ணுவாரு சுப்பையன் பிள்ளைன்னு எப்போதோ அப்பா சொன்னது நினைவுக்கு வருகிறது. உண்மைதான்... ரசவடைன்னு எழுதினத நக்கி பார்க்குமளவிற்கு "அலவரைத்தனம்" இப்போதும் எனக்கு உண்டு. ரசவடையை நினைக்கும் போதெல்லாம் எழுத்துக்களை விட எச்சி அதிகமாக ஊறுகிறது.

தமிழகத்தின் வேறு எந்த இடத்திலும் அத்தனை பரிச்சயம் இல்லாத இந்த ரசவடையை எனக்கு அறிமுகப்படுத்தியது, கன்னியாகுமரி வடமதியின் நாஞ்சில் நாட்டு காப்பிக்கடைகள்தான். நாஞ்சிலின் மொழிக்கென்றே சில அதீத தோரணைகள் உண்டு. பார்த்தவுடன் குட்மார்னிங்...சொல்ல எத்தனித்து, காலை வணக்கமென்று சொல்லும் அதிகபிரசங்க மொழி பற்றெல்லாம் இங்கில்லை.
காலை உணவு முடிந்ததா? என்ற அர்த்தத்தில் வரும் "மக்கா.. வா.. என்னா... காப்பி குடிச்சாச்சா?" என்ற ஒற்றை மொழிப்பிரயோகத்தில் குட்மார்னிங்...
எப்படி இருக்கிறீர்கள்?
இந்த நாள் இனியதாகட்டும்.
காலை உணவு முடிந்திருக்குமென நம்புகிறேன். - என்ற எல்லா "குசல விசாரிப்பு" கேள்விகளும் அடங்கும். "காப்பி குடித்தல்" என்ற பதம், நாஞ்சில் நாட்டில் காலை உணவு அல்லது இரவு உணவு என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. முற்றிப் பழுத்த பெருசுகள், வயல் வேலைக்கு செல்லும் விவசாயிகள், வீட்டில் சண்டையிட்ட "முன்கோப"கணவன்மார்களால் காப்பிக்கடைகளின் கல்லாப்பெட்டிகள் ஓரளவிற்கு நிரம்பும். அப்படி சாப்பிட்டவர்களின் பேச்சு கொடுக்கும் போது, அவர்களின் பதில் பெரும்பாலும் இவ்வகையிலே இருக்கும்.

"நாகேந்திரனுக்கு கடையில ஆப்பமும், ரசவடையும் தின்னேன் பார்த்துக்கோ..." அல்லது இட்லியும் ரசவடையும், அல்லது தோசையும் ரசவடையும், அல்லது இடியாப்பமும் ரசவடையும்.
இப்படி ஒழுக்கம் கெட்ட அரசியல்வாதிபோல் எல்லா பதார்த்தங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் இந்த ரச வடை.
இப்படி ஒழுக்கம் கெட்ட அரசியல்வாதிபோல் எல்லா பதார்த்தங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் இந்த ரச வடை.
நாஞ்சில் நாட்டு மனிதர்களின் ரத்தத்தோடு கலந்தது ரசவடையின் சுவை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நாஞ்சில் நாட்டு காப்பி கடைகள் அனைத்தும் தென்னம் ஓலை வேய்ந்த கூரைக் கடைகள். சாயங்கால நேரம் கடைக்குள் போய் உட்கார்ந்ததும் வரும் ஒரு இதமான "குளிர்ச்சி" நம்மை ஈர்க்கும். வார்த்தைகளில் எழுத முடியாத, அல்லது இதுவரை வகைப்படுத்தப்படாத "ஒரு மணமும்" நம்மை தாக்கும். வாழையின் துண்டு இலையை விரித்து, தண்ணீர் தெளித்து காத்திருந்தால் சுடச் சுடச் தோசையோ, இட்லியோ, ஆப்பமோ வந்து விழும். பதார்த்தம் விழுந்த இடத்தின் சூட்டில் இலை வாடி, கருத்து ஒரு விநோத மணம் எழுப்பும். சூடாற காத்திருக்கும் சில வினாடிகளில் சுடச், சுடச் தேங்காய் சட்னி இலையை நனைக்கும். பின்பு ரசத்தில் மிதந்து கொண்டே "தலைவன்" வருவான். இந்நாள் வரை ஒற்றை ரசவடையாய் என் இலையில் விழுந்ததே இல்லை. நாஞ்சிலின் புறத்தில் "ரசவடைகள்" ஜோடியாகவே நடமாடும்.
அந்நாளில் ரசவடையின் ஆமைவடை(பருப்பு வடை) செய்ய, கடலைப்பருப்பைப் பயன்படுத்துவதில்லை. மூக்குப்பருப்பு என்ற பெரிய உட்பக்கமாய் குழிந்த "பட்டாணி பருப்பையே" பயன்படுத்துவர். ஆங்கிலத்தில் yellow split peas என இப்பருப்பு அழைக்கப்படுகிறது. அதே போல் எல்லோரும் நினைப்பது போல் மீந்த வடைகளை ரசத்தில் போட்டும் செய்யப்படுவதல்ல "ரசவடை". அது ஒரு தனிப் பதார்த்தம். அந்தச் சுவையை உண்டாக்குவதெல்லாம் ஒரு தனி 'கைப்புண்ணியம்". வடையை விடுத்து, அதற்குண்டான ரசம் வைத்தலும் ஒரு கம்ப சூத்திரம் தான். எலுமிச்சை சேர்க்கணும், தேங்காய் தண்ணி சேர்க்கணும், கொதித்த பின்னாடி கொத்தமல்லி தழை சேர்க்கணும்னு பல கெடுபிடிகள். அப்படிப்பட்ட ரசத்தில் குளித்த ரசவடையை பிட்டு வாயில் போட்டால் பட்டென கரையும் லாவகம் சில கடைகளில் மட்டும் வாய்க்கும். இதமான ரசவடையில் கைவைக்கும்போது, மணமான புதுப்பெண் குழைவது போலவொரு "குழைவு" ஏற்படும். புளிச்சமாவு தோசையும், காந்தாரி மிளகு வைத்து அரைத்த தேங்காய் சட்டினியும், தொட்டுக்க கொவந்த ரசவடையும் சேர்ந்த கூட்டானது தேனாமிர்த சுவையை மிஞ்சும்.
நாகர்கோவிலில் வடசேரி இறக்கத்தில் குண்டுப்போத்தி ஹோட்டலின் ரசவடையை அப்பா அடிக்கடி சிலாகிப்பார். மணத்திட்டை தியேட்டர் கடை ரசவடை என் தவிர்க்க முடியாத தேர்வு. துவரங்காடு, புத்தேரி பகுதி கடைகளில் சற்று புளிப்பு கூடிய தூக்கலான ரசத்தின் சுவை அதீதம். மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் சாப்பிட்ட வடசேரி கிருஷ்ணன் கடை ரசவடையிலும் "அந்தச் சுவை சூட்சமம்" வாய்த்திருந்தது.
இப்போதும் ஊருக்கு செல்லும் போது தலையாய முக்கிய பணிகளில் ஓன்று தேடிப்பிடித்து நாலைந்து ரசவடை தின்பதாகும். கழிந்த மாதமும் அதே குறிக்கோளில் நாகர்கோயிலின் ஒரு பிரபல கடையில் ரசவடை ஆர்டர் செய்து காத்திருந்தேன். பீங்கான் கிண்ணத்தில் ஆவிப்பார்க்க கொண்டு வந்தான் "நயவஞ்சகன்" ஒருவன். வழக்கமாய் ரசத்தில் நீந்தி மிதந்து கொண்டிருக்கும் ரசவடை, யாருக்கோ பயந்து ரசத்தில் முழ்கியிருந்தது. மிதக்காத வடையை காணாது ஒரு வேளை சூப்பாக இருக்குமோவென சந்தேகமுற்றேன். நயவஞ்சகன் ரசவடைதான் என அடித்துக் கூற, கொடுத்த ஸ்பூனை கொண்டு கிளறினேன். காய்ந்த கிழங்கு போல் "திருமுகம்" காட்டி மீண்டும் ரசத்தில் முங்கிக் கொண்டது "அவ்வடை". மனதைத் தேற்றிக் கொண்டு, ஒரு ஸ்பூன் ரசத்தை எடுத்து நுனி நாக்குக்கு புகட்டினேன். இதுவரையில் நானறிந்திராத புளிப்பு சுவையுடன் கூடிய ஒரு மசாலா நீர் பின்மண்டைக்குள் பாய்ந்தது. விஷம் குடித்த அதிர்ச்சியில் எனக்கு கண்ணீர் முட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks